அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராம அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் 2025 சூன் மாதத்தில்ல் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஒரு தலைமை ஆசிரியர் ,ஒரு உதவி ஆசிரியர் என 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் ஒருவர் விடுமுறை எடுக்கும் போதும் கற்றல் கற்பித்தல் தொடர்பாக மாற்றுப் பணியில் ஈடுபடும் போதும் , பள்ளி கல்வி ஙதுறை மற்றும் இதர துறை சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் போதும் பள்ளி மாணவர்களின் கல்வி நலன் முற்றிலுமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே ஏழை மாணவர்கள் கல்வி நலன்கள் பாதிக்கப்படாதவாறு செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டுமாய் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக செங்குணம் குமார் அய்யாவு , செங்குணம் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாமில் மனு கொடுத்துள்ளார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story



