கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - வனத்துறை அறிவிப்பு !

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - வனத்துறை அறிவிப்பு !
X
மழை குறைந்ததால் கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு.
கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம், வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டது. சிறுவாணி பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்து சீரடைந்துள்ளதாகவும், நேற்று (07.08.2025) முதல் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.
Next Story