தேவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வீடியோவுக்கு எதிர்ப்பு: கோவையில் வழக்கறிஞர்கள் புகார் !

X
"பரிதாபங்கள்" என்ற YouTube சேனலில் 04.08.2025 அன்று வெளியான "Society பாவங்கள்" என்ற வீடியோவில் தேவர் இனத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் சமூகத்தை காட்டு மிராண்டிகளாக சித்தரிக்கும் வகையில் கருத்துகள் கூறப்பட்டதாக கூறி, 30க்கும் மேற்பட்ட தேவர் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த வீடியோவில் இடம்பெற்ற சில வசனங்கள் சமூக வன்முறையை தூண்டும் வகையிலும், ஒரு சமூகத்தை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக YouTube சேனலை தடை செய்யும் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

