கோவையில் மது கடையில் ஏற்பட்ட வாய்த் தகராறு : ஒருவரை பிளேடால் அறுத்து தாக்கிய இருவர் தப்பி ஓட்டம்!

X
கோவை, அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30), தனது நண்பர் அந்தோணியுடன் கடந்த 2-ஆம் தேதி கோவைபுதூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டு இருந்தார். அதே இடத்தில் இருந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்தி மற்றும் மணி ஆகிய இருவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 5-ஆம் தேதி மாலை, விக்னேஷ் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி, அறிவொளி நகர் ஐந்து ரூபாய் டீக்கடை அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் நண்பருடன் மது அருந்திக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த மணி, சட்டை பையில் வைத்து இருந்த சிறிய பிளேடால் விக்னேஷின் இடது நெஞ்சில் கிழித்து உள்ளார். பின் முத்து அந்த பிளேட்டை கொண்டு விக்னேஷின் முதுகிலும் குத்தி அறுத்து உள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததும், இருவரும் தப்பி ஓடியதாக தெரிகிறது.vஉடனே பொதுமக்கள் உதவியுடன் விக்னேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் முத்து மற்றும் மணி மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். தப்பி ஓடிய முத்து மற்றும் மணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் விக்னேஷ் ரத்தக் காயம் அடைந்து கிடக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

