ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
X
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜை கோ பூஜை நவகிரக பூஜை கணபதி ஹோமம் லஷ்மி ஹோமம் உள்ளிட்ட பூஜாளுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை பூர்ணாவதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு செய்து கோவில் உட்பிரகாரம் வளம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story