வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழி சாலையில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி

X
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழி சாலையில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி நீர்வரத்து கால்வாய் முறையாக அமைக்க வில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கன மழை காரணமாக வளையம்பட்டு தேசிய நெடுஞ்சாலை இருபுறம் உள்ள புறவழி சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வாகனங்கள் வழியாக செல்லும் போது நீரில் மூழ்கி பழுதாகி தள்ளி செல்லக்கூடிய நிலையில் ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதி இல்லாததால் இது போன்ற சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் நிலவி வருவதாகவும் எனவே பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மழை நீர் செல்வதற்கு முறையான கால்வாய்களை அமைத்து தர வேண்டும் எனவும் அதே நேரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
Next Story

