வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி ரிமோட் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி ரிமோட் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.
X
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி ரிமோட் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி ரிமோட் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நியூடவுன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியின் ரிமோட் பழுதாகியதால் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரம் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுப்பு வேலி சுமார் 70 மீட்டருக்கு சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலை துறையினர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர் மேலும் இது தொடர்பாக நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காற்றாலை ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Next Story