நாட்றம்பள்ளி அருகே குன்று நிலத்தை சமமாக்கும் பொழுது ராட்சத பாறை ஜேசிபி மீது விழுந்து விபத்து ! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்*

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே குன்று நிலத்தை சமமாக்கும் பொழுது ராட்சத பாறை ஜேசிபி மீது விழுந்து விபத்து ! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் திம்மம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ஆதிகிருஷ்ணன் இவருக்கு சொந்தமாக 57 சென்ட் நிலம் உள்ளது இந்த நிலையில் நிலம் மேடு,பள்ளமாகவும் அதேபோல பாறைகள் அதிகமாக உள்ள குன்று நிலமாக உள்ளதால் அதனை சமமாக்க அதே பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவருக்கு சொந்தமான ஜேசிபி ஓட்டுநர் ராஜா என்பவரிடம் நிலத்தின் உரிமையாளர் கூறியதை தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மலை குன்றை சமம் செய்து கொண்டிருக்கும் பொழுது பொழுது ராட்சத பாறை ஒன்று உருண்டு ஜேசிபி மீது விழுந்து அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் ராஜா ஜேசிபியில் இருந்து எகிறி குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார் இது குறித்து திம்மம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குன்றும் பாறைகள் அதிகமாக உள்ள நிலத்தை சமம் செய்யும் பொழுது பாறை உருண்டு வந்து ஜேசிபி மீது விழுந்து அப்பளம் போல் நொறுங்கி அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் தப்பித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Next Story

