கேப்டன் போட்டு வைத்து மாற்று கட்சியினர் தேர்தலில் வாக்கு சேகரிக்க கூடாது விஜயகாந்த் பிரேமலதா பேட்சி

கேப்டன் போட்டு வைத்து மாற்று கட்சியினர் தேர்தலில் வாக்கு சேகரிக்க கூடாது விஜயகாந்த் பிரேமலதா பேட்சி
X
கேப்டன் போட்டு வைத்து மாற்று கட்சியினர் தேர்தலில் வாக்கு சேகரிக்க கூடாது விஜயகாந்த் பிரேமலதா பேட்சி
திருப்பத்தூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இலங்கை மக்கள் பரிசளித்த கேப்டன் சிலையுடன் ரத யாத்திரை துவங்கியது! நாங்கள் மூன்று நாளாக ரத யாத்திரை செல்கிறோம் மின்சாரம் துண்டிக்கப்படுது! இது இருபது வருடமாக இதுபோல் சந்தித்து வருகிறோம்! எந்த கட்சியினரும் கேப்டன் போட்டோ காண்பித்து வாக்கு சேகரிக்க கூடாது விஜயகாந்த் பிரேமலதா பேட்டி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரி அருகில் இருந்து கேப்டன் சிலையுடன் கூடிய ரதம் யாத்திரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இலங்கை மக்கள் பரிசளித்த இந்த ரதத்தின் யாத்திரையை திருப்பத்தூரில் இருந்து துவக்கினார். முதல் நாளிலிருந்து இந்த ரதத்தை இயக்க நினைத்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதமானது . நேற்று குடியாத்தத்தில் இருந்து ரதம் கிளம்புவதாக இருந்தது. ஆனால் வரும் வழியில் பெரும் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டு திருப்பத்தூர் வந்தது. எனவே திருப்பத்தூரில் இருந்து இந்த ரத்தத்தை துவக்கி இருக்கிறோம். முதலில் கும்முடிபூண்டி , திருவள்ளூர் அடுத்ததாக காஞ்சிபுரம் இன்று திருப்பத்தூர் வந்திருக்கிறோம். மக்கள் மத்தியில் மிகப் பெரும் எழுச்சி காணப்படுகிறது . மக்கள் மிகுந்த ஆதரவளிக்கின்றனர். வரும் 2026 ஆம் தேர்தலில் மிகப்பெரிய சாதனை சகாப்தத்தை ஏற்படுத்தி நாங்கள் இடம்பெறும் கூட்டணி ஜெயிக்கும். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவர் . எந்த கட்சிகளும் கேப்டனின் புகைப்படத்தை உபயோகிக்க கூடாது. கேப்டன் எம்ஜிஆரை தனது மானசீக குருவாக ஏற்றவர் அதேபோல் கேப்டனை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டோம் என பகிரங்கமாக அறிவிப்பவர்கள் கேப்டனின் புகைப்படத்தை உபயோகிக்கலாம். அதை தவிர்த்து கேப்டனின் புகைப்படத்தை உபயோகித்தால் எங்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். கேப்டன் இலங்கை வாழ் தமிழர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார்கள் என்பது அனைவருக்கும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் தெரியும். இதுவரை எந்த ராஜாவிற்கும் முதலமைச்சருக்கும் மக்கள் தேர் வழங்கியதாக வரலாறு இல்லை . முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பதை போல கேப்டன் எல்லா மக்களுக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்து வள்ளலாக வாழ்ந்தவர். அதனால்தான் இன்று இலங்கை வாழ் தமிழ் மக்கள் இந்த ரதத்தை இலங்கையிலிருந்து கேப்டனுக்காக பரிசளித்திருக்கின்றனர். இந்த ரத யாத்திரையை ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மக்களை தேடி மக்கள் தலைவரான மக்கள் சொத்தான கேப்டனை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நடந்து வருவது நிறையும் குறையும் கலந்த ஒரு ஆட்சி இன்னும் வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டியது உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்...
Next Story