புன்னம் சத்திரம்-வீடு தேடி ரேஷன் பொருட்கள்- எம்எல்ஏ இளங்கோ விளக்கம்.
புன்னம் சத்திரம்-வீடு தேடி ரேஷன் பொருட்கள்- எம்எல்ஏ இளங்கோ விளக்கம். கரூரை அடுத்த புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நிகழ்ச்சி புகலூர் வட்டாட்சியர் குணசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி MLA இளங்கோ கலந்து கொண்டார். இந்த முகாமில் , க.பரமத்தி வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் தனிப்பட்ட குறைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்டங்களை அரவக்குறிச்சி எம்எல்ஏ வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கு கூடி இருந்த பொது மக்களிடையே பேசிய எம்எல்ஏ இளங்கோ,தமிழக அரசு தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. விரைவில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என தெரிவித்தார்.
Next Story





