மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்

பீகார் வாக்காளர் பட்டியல் முறைகேடு தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்
தருமபுரி இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் அ.குமார், மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சி.நாகராஜன், சோ.அர்ச்சுனன், வே‌விசுவநாதன், ஆர்.மல்லிகா, தி.வ.தணுசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியதைக் கண்டித்தும், ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஏற்றுக் கொள்ளாமல் பிறப்புச் சான்று கேட்டதைக் கண்டித்தும் குடிபெயர்ந்த தலித், சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியைத் கண்டித்தும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.
Next Story