கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!
X
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான லாஸ்காட்சாலை, சீனிவாசபுரம், காா்மேல்புரம், இருதயுரம், அப்சா் வேட்டரி, ஆனந்தகிரி, எம்.எம். சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் தரைப் பகுதியிலிருந்து 10 மீ. உயரம் மட்டுமே கட்டடங்கள் கட்ட வேண்டும். மேலும், குடியிருப்புப் பகுதிக்கென வரையறுக்கப்பட்ட இடத்திலேயே வீடுகள் கட்ட வேண்டும், விவசாயப் பகுதிகளில் கட்டக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், விதி முறைகளை மீறி குடியிருப்பு வீடுகளுக்குப் பதிலாக காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் கட்டப்பட்டு வருவதால் நகா்ப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் கேரட், பீட்ரூட், நூக்கல், உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலைக் காய்கறிகளும், பேரி, பிளம்ஸ், பீச்சஸ் போன்ற பழ வகைகளின் மரங்கள் அழிந்து வருகின்றன. எனவே கொடைக்கானல் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் குறித்து கொடைக்கானல் நகராட்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.
Next Story