தவெக மாநாட்டிற்கான பணிகள் தீவிரம்
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி அருகே வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 4 மணி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையி்ல் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 20-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள், கழிவறைகள் ,மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 306 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மாநாட்டின் முதல் நாளே மேடையின் பின்புறம் உள்ள கேரவானில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பகுதியில் தங்குவதாக தெரிகிறது.1000 அடி உயரத்திற்கு கொடி கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட உள்ளது. மாநாட்டு திடலில் தண்ணீர் பற்றாக்குறை தீர்ப்பதற்காக நிலத்திற்கு அடியில் பைப்புகள் போடப்பட்டு 250 குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டிகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை நேற்று பொதுச் செயலாளர் குஷி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story




