பச்சிளங் குழந்தை பரிதாப பலி

பச்சிளங் குழந்தை பரிதாப பலி
X
மதுரை திருமங்கலம் அருகே பிறந்து 35 நாட்களான குழந்தை பரிதாபமாக பலியானது
மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரினை சேர்ந்த வெள்ளைச்சாமி (32) என்ற கூலித்தொழிலாளிக்கு ராதா(26) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகள் மாயாஸ்ரீ(3). உள்ள நிலையில் 35 நாட்களுக்கு முன் பிறந்த மற்றொரு பெண் குழந்தைக்கு தனுஸ்ரீ என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (ஆக.7) அதிகாலை 3 மணிளவில் குழந்தை தனுஸ்ரீ அழுததால் தாய் ராதா பால் கொடுத்துள்ளார். பின்பு தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைத்து தானும் தூங்கியுள்ளார். காலை 6 மணிக்கு குழந்தைக்கு சொட்டுமருந்து கொடுக்க எழுப்பிய போது, அசைவற்று இருந்ததால் பெற்றோர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பால் குடித்தவுடன் தூங்கவைத்ததால் புரைபோய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறினாலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். வில்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்
Next Story