குருபரப்பள்ளி அருகே கற்களை வெட்டி எடுத்த கம்ப்ரசர் டிராக்டர் பறிமுதல்.

குருபரப்பள்ளி அருகே கற்களை வெட்டி எடுத்த  கம்ப்ரசர் டிராக்டர் பறிமுதல்.
X
குருபரப்பள்ளி அருகே கற்களை வெட்டி எடுத்த கம்ப்ரசர் டிராக்டர் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் உதவி இயக்குனர் வர்ஷா தலைமையில் அதிகாரிகள் குருபரப்பள்ளி அருகே உள்ள பூதிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி அந்த பகுதியில் கம்ப்ரசர் டிராக்டர் மூலம் கற்களை வெட்டி எடுப்பது தெரிந்தது. அதை அடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story