ராசிபுரம் நகராட்சி சார்பில் உங்களுடன், 'ஸ்டாலின் முகாம்' ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு..

ராசிபுரம் நகராட்சி சார்பில் உங்களுடன், ஸ்டாலின் முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு..
X
ராசிபுரம் நகராட்சி சார்பில் உங்களுடன், 'ஸ்டாலின் முகாம்' ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு..
ராசிபுரத்தில் அமையவுள்ள டைட்டில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட, தமிழக முதல்வர் அவர்கள் அடுத்த மாதம் ராசிபுரம் வருகை தர இருப்பதாக ராஜ்யசபா உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி எல்லப்ப தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன், 'ஸ்டாலின் முகாம்' நடைபெற்றது. இம்முகாமில், பட்டா பெயர் மாற்றம், மின்சார சேவை, இ சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்து பயனடைந்து வரும் நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலந்து கொண்டு ஆய்வு செய்து பொதுமக்களிடையே சிறப்பு உரையாற்றினார். முகாமில், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், ராசிபுரத்தில் விரைவில் அமையவுள்ள டைட்டில் பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுவதற்காக ராசிபுரத்திற்கு வருகை தர இருப்பதாக தெரிவித்தார். இம்முகாமில், சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், ராசிபுரம் நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story