விடியல் ஆரம்பம் சார்பில் தேசிய கைத்தறி தினம்

விடியல் ஆரம்பம் சார்பில் தேசிய கைத்தறி தினம்
X
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் தேசிய கைத்தறி தினம்
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் தேசிய கைத்தறி தினம் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் கைத்தறி கூடத்திற்கு சென்று, அங்குள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்தினர். பள்ளி மாணவ மாணவர்களுக்கு கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து நெசவாளர்கள் எடுத்துரைத்தார்கள். விடியல் ஆரம்பம் நிறுவனர் விடியல் பிரகாஷ் கூறியதாவது: 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், கைத்தறித் தொழிலை மேம்படுத்துவதற்கும், இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாளில், கைத்தறி நெசவாளர்களைப் பாராட்டும் விதமாகவும், கைத்தறி பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவ மாணவிகள் வருங்காலங்களில் கைத்தறியில் நெசவு செய்த ஆடைகளுக்கு முக்கியத்துவம் தருவோம் என்றும், நன்றாக படித்து இந்த தொழிலை காப்போம் என்றும், உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில் சௌடேஸ்வரி, சண்முகம், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story