எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்...

எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்...
X
எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட திம்மநாயக்கன்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத் திமுக செயலாளர் கே.பி.ராமசாமி தலைமையில், சுமார் 25-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுகச் செயலர் கே.பி.ராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதியதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை வரவேற்று கட்சியில் இணைத்துக்கொண்டனர். இதில் திம்மநாயக்கன்பட்டி அண்ணா நகர் அதிமுக கிளைச் செயலாளர் வெள்ளைய்யன், ஆர்.சந்திரசேகரன், என்.செல்வம், வெங்கடாஜலம், வேல்முருகன், கிருஷ்ணன் மற்றும் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
Next Story