சந்தோஷி அம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
Komarapalayam King 24x7 |8 Aug 2025 9:13 PM ISTகுமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவில் திருவிழா கணபதி பூஜையுடன் நேற்று துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள தாளங்கள் முழங்க, பெண் பக்தர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு ஆடையணிந்தவாறு தீர்தக்குடங்கள் எடுத்து வந்தனர். மலர்களால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தோஷி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார். இன்று காலை முதல் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்யவுள்ளனர். மஞ்சள், பன்னீர், திருமஞ்சனம், திருநீறு, குங்குமம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடக்கவுள்ளன. அம்மன் பிறந்த நாளான இன்று ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருவதால், பக்தர்கள் தங்கள் சகோதர, சகோதரிகளுக்கு ரக்ஷாபந்தன் கயிறு கட்டிக்கொள்வார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். அம்மன் புகழ் பாடும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சகிலா அம்மையார் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
Next Story


