ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் நியாய விலைக் கடை திறப்பு நகர மன்ற தலைவர் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |8 Aug 2025 9:18 PM ISTராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் நியாய விலைக் கடை திறப்பு நகர மன்ற தலைவர் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் ஆர்.சி.எம். எஸ் நியாய விலை கடை எண் 14, புனரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய நியாய விலை கடையை ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நியாய விலை பொருட்கள் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் இப்பகுதியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் கே. கந்தசாமி, மற்றும் கவுன்சிலர்கள் வி. நாகேஸ்வரன், என். கலைமணி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கே.சாந்தி, மற்றும் கட்சி நிர்வாகிகள் எம். மாதேஸ்வரன், எம். நித்யா, மேலும் அரசு அதிகாரிகள் கூட்டுறவு சார் பதிவாளர் மா.தேவகி, பொது மேலாளர் பொறுப்பு போ.சாந்தி, உதவி மேலாளர்கள் என். குணசேகரன், எஸ். ரத்தினவேல், கு. தமிழ்மணி, மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
