மேல ஊத்தாம்பட்டி-மழை வேண்டி கிராம மக்கள் திருவிளக்கு பூஜையில் ஈடுபட்ட பெண்கள்.

மேல ஊத்தாம்பட்டி-மழை வேண்டி கிராம மக்கள் திருவிளக்கு பூஜையில் ஈடுபட்ட பெண்கள்.
மேல ஊத்தாம்பட்டி-மழை வேண்டி கிராம மக்கள் திருவிளக்கு பூஜையில் ஈடுபட்ட பெண்கள். கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம் தாலுக்கா , சிவாயம் ஊராட்சியில் உள்ள மேல ஊத்தாம்பட்டி பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று கௌரி பூஜை , பௌர்ணமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வானம் பார்த்த பூமியாக உள்ள இப்பகுதி கிராம மக்கள் தங்கள் பகுதியில் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். மேலும் கன்னிப்பெண்கள் திருமணமாக வேண்டும் எனவும் , திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும்,விவசாயிகள் கடனில்லா வாழ்வு அமைய வேண்டும் என மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
Next Story