சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட வரலட்சுமி நோன்பு கும்ப பூஜை

சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட வரலட்சுமி நோன்பு கும்ப பூஜை
X
தூத்துக்குடி ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் 2007 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட வரலட்சுமி நோன்பு கும்ப பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் சேவாபாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் நடத்தும் ஆறாம் ஆண்டு ஆடி மாத பௌர்ணமி தினம் மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட கும்ப பூஜை நடைபெற்றது. . இதில் திருமணமான சுமங்கலி பெண்கள் கணவன் ஆயுள், ஆரோக்யம், தொழில் வேண்டியும். திருமண வயதில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டியும் சுமார் 2007 பெண்கள் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Next Story