அருள்மிகு அய்யனார் மற்றும் மோடை மலை சுவாமி கோவிலுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட ஊர்வலம், அபிஷேகம்.
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அய்யனார் மற்றும் மோடை மலை சுவாமி கோவிலுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட ஊர்வலம், அபிஷேகம். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள மருவத்தூர் கிராமத்தில் அருள்மிகு அய்யனார் மற்றும் மோடைமலை சுவாமி கோவில் உள்ளது, இக்கோவில் ஆண்டு தோரும் ஆடி மாதம் வெள்ளிகிழமை முன்னிட்டு பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடத்துவது வழக்கம் அதன்படி இந்தாண்டு ஆடி மாத 4 வது வெள்ளிகிழமையை முன்னிட்டு, இன்று மருவத்தூர் தேரடி விநாயகர் கோவிலில் இருந்து கரகம் பாலித்து, புறப்பட்ட பால்குட ஊர்வலம் பம்பை உடுக்கை முழுங்க முக்கிய வீதி வழியாக, ஊர் எல்லைப் பகுதியில் உள்ள அய்யனார், மோடைமலை சுவாமி கோவிலுக்கு வந்தடைந்தது, அங்கு பக்தர்கள் குடத்தில் சுமந்து வந்த பாலில் அய்யனாருக்கும், மோடைமலை சுவாமிக்கும் அபிஷேகம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story




