பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
X
பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கிராம தேவதைகளான அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீ எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் அருகாமையில் தீ குண்டம் அமைக்கப்பட்டு ஸ்ரீ எல்லையம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த தீமிதி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story