இடி மின்னலுடன் கூடிய கன மழை, ஆடி மாத விவசாய பணிக்கு ஏற்ற மழையாக இருக்கும் என பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

X
பெரம்பலூர் மற்றும் மாவட்டத்தின் சுற்று பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை, ஆடி மாத விவசாய பணிக்கு ஏற்ற மழையாக இருக்கும் என பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி ..... பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்து வந்தது, இதில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்ததால், பொதுமக்கள் பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து இன்று மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு திடீரென, வானில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை பெரம்பலூர், நகர் மற்றும் சுற்றுப்பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்தில், புறநகர் பகுதிகளான பேரளி, குன்னம் மற்றும் மேலமாத்தூர், நான் போய் குடிக்காடு அகரம் சிகூர், வாலிகண்ட புரம், எசனை வேப்பந்தட்டை, குரும்பலூர், செட்டிகுளம், ஆலத்தூர், பாடலூர், உள்ளிட்ட சுற்று பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ததால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நின்றன, இதனால் குளிர்ச்சியான சுழல் நிலவியது. மேலும் இந்த மழை ஆடி மாத விதைப்பு பணிக்கும், மானாவாரி நிலத்தில் விதைப்பு செய்த விதைகள், முளைத்து வளர்வதற்கு ஏற்ற மழையாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

