தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவிகள்

தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவிகள்
X
தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவிகள்
பசித்தால் உணவு எடுத்துக் கொள் 1000 ம்வது நாளை முன்னிட்டு இருசக்கர வாகன மெக்கானிக் சரவணன் கல்வி ஊக்கத்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கு. மூன்று சக்கர வாகனம், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேலவளம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் 108 ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ ஊர்திக்கு கடந்த 17 வருடங்களாக இலவசமாக பஞ்சர் போட்டு வருகிறார். ஏழை மாணவர்களின் கல்விக்கு ஊக்கத்தொகை அளிப்பது, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குவது, அவசர ஊர்த்தியான ஆம்புலன்ஸ்க்கு இலவசமாக பஞ்சர் போட்டு தருவது இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் உதவும் கரங்கள் என வாசகம் எழுதிய ஒரு கண்ணாடி பெட்டிக்குள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான பேனா நோட்டுக்கள், ஆதரவற்றோருக்கு உடை போன்றவை வைக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இருப்பவர்கள் அதில் வைத்து விட்டு செல்லலாம் பசித்தால் உணவு எடுத்துக்கொள் போன்ற பல்வேறு சேவைகளை இப்பகுதியில் செய்து வருகிறார். மேலவளம் பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பசித்தாள் உணவு எடுத்துக்கொள் 1000-வது நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனம் மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக எழுத்துச் செல்வர் கலைமாமணி முனைவர் லேனா தமிழ்வாணன்,தொழிலதிபர் மனோ சாலமன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு கல்வி ஊக்கத்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் பசித்தால் உணவு எடுத்துக் கொள் பல்வேறு பகுதிகளில் செய்து வரும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க நிர்வாகிகளை சரவணன் சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் பெருமக்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story