ஆடி வெள்ளியில் பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு.

சிறப்பு பூஜையால் இரவில் இடி மின்னலுடன கூடிய நல்ல மழை விடிய விடிய பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 2025 ஆகஸ்ட் 8 இரவு செல்லியம்மன் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி
பெரம்பலூர் அருகே செங்குணம் செல்லியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியில் பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு. பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் ஏரிக்குள் அருள்மிகு செல்லியம்மன் கோவில் உள்ளது. நல்ல மழை பெய்ய வேண்டியும் , விவசாயம் செழிக்கவும் ஆடி மாத ஒரு வெள்ளியில் செல்லியம்மனுக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு செய்ய வேண்டுமென செல்லியம்மனை குல தெய்வமாக லழிப்படும் குடும்பத்தினரும், கிராம பொதுமக்களும் முடிவு செய்தனர். இதன்படி 2025 ஆகஸ்ட் 8 இன்று மாலையில் செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து செல்லியம்மன் கோவிலுக்கு குதிரையுடன் ஆண்களும் , பெண்களும் என திரளான பொதுமக்கள் சென்றனர் .செல்லியம்மன் கோவில் வளாகத்தில் பெண்கள் அடுப்பில் பொங்கல் வைக்க, ஆண்கள் பெருமாள் மலையடிவாரம் அருகே ஓரிடத்திற்கு குதிரையுடன் சென்று சாமி குடியழைக்கப்பட்டு மீண்டும் செல்லியம்மன் கோவில் வந்தனர். பின்பு செல்லியம்மனுக்கு பூசாரி பொதுமக்களின் பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து பொதுமக்கள் சாமி கும்பிட்டு வீடு திரும்பினர். செல்லியம்மன் உனக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பதும் ஐதீகம். இதன்படி இரவில் இடி மின்னலுடன கூடிய நல்ல மழை விடிய விடிய பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 2025 ஆகஸ்ட் 8 இரவு செல்லியம்மன் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது..
Next Story