அரக்கோணத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!

அரக்கோணத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!
X
தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!
அரக்கோணத்தை அடுத்த பாணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தனியார் நிறுவனத்தின் யார்டு கட்டுமான புனரமைப்பு பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.வழக்கம்போல் நேற்று காலை வேலைக்காக பாணாவரத்தில் இருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணம் வந்த ராஜேந்திரன் ரயிலில் இருந்து கீழே இறங்கி அந்தப் பகுதியில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story