நோய் தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தின் எதிரே பொது இடத்தில் அதிகளவில் சிறுநீர் கழிப்பதால் நோய் தொற்று பரவுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அறந்தாங்கி நகராட்சி துறையினர் அந்த இடத்தை சுத்தம் செய்து கோலம் போட்டு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Next Story




