தெற்கு காந்திகிராமம்- மார்பக புற்று நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை.
தெற்கு காந்திகிராமம்- மார்பக புற்று நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை. கரூர் தெற்கு காந்திகிராமம் சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மொட்டையப்பன் மனைவி ராசாம்மாள் வயது 75. இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மார்பக புற்று நோய் ஏற்பட்டு அதற்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மன விரக்தியோடு வாழ்ந்து வந்த ராசம்மாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 8:30 மணி முதல் 9.00 மணிக்குள்ளான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது மகன் முருகேசன் வயது 52 என்பவர் இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த ராசாம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்
Next Story




