கரூர்-சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது.மது பாட்டில்கள் பறிமுதல்.
கரூர்-சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது.மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் பெட்ரோல் பங்க் அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 10:30 மணி முதல் 10 45 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கரூர் படிக்கட்டு துறை பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் மகன் தமிழ்ச்செல்வன் வயது 36 என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு , அவர் விற்பனைக்கு வைத்திருந்த 27 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தமிழ்ச்செல்வனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story





