கோவை: எம்.பி.பி.எஸ். படிக்க போலி சான்றிதழ் – கும்பல் மீது போலீஸ் விசாரணை

X
கோவை பொன்னையராஜபுரம் மாணவர், நீட் தேர்வில் வெளிநாட்டு வாழ் இந்தியர் பிரிவில் இடம் பெற உறவுமுறை சான்றிதழ் தேவைப்பட்டதால், இடையர்பாளையம் வெள்ளியங்கிரி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்து பெற்றார். அந்த சான்றிதழ் தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழுவால் போலி என அறிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, வெள்ளியங்கிரி மற்றும் நண்பர்கள் போலி ரப்பர் ஸ்டாம்ப் மூலம் சான்றிதழ் தயாரித்தது உறுதியானது. சம்பவத்தில் ஈடுபட்டோர் எண்ணிக்கை மற்றும் முந்தைய செயல்பாடுகள் குறித்து வெரைட்டி கால் ரோடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

