கோவையில் போலீஸ் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை – தாய், அக்காளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை

கோவையில் போலீஸ் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை – தாய், அக்காளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
X
காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தாரிடம் மேஜிஸ்திரேட் விசாரணை.
கோவை பேரூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அறிவொளி ராஜன் (60), கடந்த 5ம் தேதி இரவு கடைவீதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்று, தன்னை யாரோ துரத்துவதாக கூறிய பிறகு, சப்-இன்ஸ்பெக்டர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து உதவி கமிஷனர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வெர்ஜினி வெஸ்டா, சம்பவ நேரத்தில் பணியில் இருந்த போலீசாரையும், சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகளையும் தனித்தனியாக நேற்று விசாரித்தார். பின்னர், அறிவொளி ராஜனின் தாயார், அக்காள் வீரமணியையும் சந்தித்து, அவரது நடத்தை, மனநிலை குறித்து கேள்விகள் கேட்டார். அவர்கள், சில நாட்களாக அவர் தன்னை யாரோ கொலை செய்ய துரத்துவதாகக் கூறிவந்ததாகவும், ஆனால் தற்கொலை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர். சாவில் சந்தேகம் இல்லை என்றும் கூறியதால், விசாரணை முடிந்து அவர்களை அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story