லிங்கத்தூர்-நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.

லிங்கத்தூர்-நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.
லிங்கத்தூர்-நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே லிங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர்பழனியப்பன் வயது 70. இவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 7 மணி அளவில் அருகில் உள்ள நான்கு ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு டூவீலர் நடந்து சென்ற பழனியப்பன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழனியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பழனியப்பனின் மகன் கதிர்வேல் வயது 50 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளியணை காவல்துறையினர் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது ? அதன் ஓட்டுனர் யார் ? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story