அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர் வராததால் வீடு திரும்பிய குழந்தைகள்

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் , மேல்பாக்கம் கிராமத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 30 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது, முன் பருவ கல்வி கற்பிப்பது, கர்ப்பிணியரின் நலனை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த அங்கன்வாடி மையத் தில் சமையலர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. இதனால், சமைக்கும் பணியை ஆசிரியரே கவனித்து வந்தார். இந்நிலையில், ஆசிரியர் வராததால், அங்கன்வாடி மையம் வேறொரு நபரை வைத்து நேற்று காலை 9:00 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனால், காலை 11:00 மணி வரை, அங்கன்வாடி மைய ஆசிரியர் பணிக்கு வரவில்லை. இதனால், மையத்திற்கு வந்த குழந்தைகள், மீண்டும் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர். பின்னர், அங்கன்வாடி மையத்திற்கு காலதாமதமாக வந்த ஆசிரியர், குழந்தைகள் யாரும் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டார்.
Next Story

