கார் ஆட்டோ மோதியதில் பெண் பலி

கார் ஆட்டோ மோதியதில் பெண் பலி
X
மதுரை உசிலம்பட்டி அருகே ஆட்டோ கார் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மட்டையன்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் இன்று காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு உச்சப்பட்டியைச் சேர்ந்த பிரியா கண்ணன் என்பவரது ஆட்டோவில் உறவினர்கள் அழைத்து வந்தாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அபே ஆட்டோ மீது உசிலம்பட்டி தேவர் கல்லூரி முன்பு தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதயதில் அபே ஆட்டோ சுக்குநூராக நொறுங்கிய சூழலில், ஆட்டோவில் பயணித்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். ஆட்டோவில் சிகிச்சை பெற சென்ற வீரம்மாள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இலக்கியா, ரமேஷ், அபிராமி, நிவேதா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பிரியா கண்ணன் என்ற 5 பேர் படுகாயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Next Story