நல திட்ட உதவிகள் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்

மதுரை திருமங்கலம் அருகே மேல உரப்பனூரில் நலத்திட்ட உதவிகளை திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் மேல உரப்பனூர் கிராமத்தில் நேற்று (ஆக.8) இரவு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக அரசின் நான்காவது சாதனையை விளக்கிக் கூறியும் நடைபெற்ற விழாவில் 18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளாக 1500 குடும்ப காரர்களுக்கும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பேக்கினையும் மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து 3500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் திருமங்கலம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் அனைத்து அணியின் சார்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story