தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் பவனி

மதுரை அழகர் கோயிலில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
மதுரை அழகர் கோவில் நேற்று (ஆக.8) ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் திருமாலிருஞ்சோலை மலை மீது உள்ள அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் ஆடி நான்காம் வெள்ளி மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இங்கு ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்தமாடி ராக்காயி அம்மனை வணங்கி சென்றனர்.
Next Story