சங்கரன்கோவிலில் வெறிநாய் கடித்ததில் ஒன்பது பேர் படுகாயம் பொதுமக்கள் அச்சம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சன்னதி தெரு பகுதியில் பொதுமக்களை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததில் சிறுவர் முதியவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி வெறிநாய் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சன்னதி தெரு பகுதியில் வெறி நாய் ஒன்று பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது இதில் முதியவர்கள் மற்றும் சிறுவர் உள்ளிட்ட ஒன்பது பேர் காயமடைந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறி நாயை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உருட்டு கட்டை கொண்டு அடித்துக் கொண்றனர் இதன் காரணமாக சன்னதி பஜார் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது இந்த நிலையில் பொதுமக்களை வெறி நாய் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவத்தில் சிசிடிவி கட்சியாய் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சங்கரன்கோவில் பற்று மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் நிலவு வருகிறது எனவே சங்கரன் கோவில்நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழந்துள்ளது
Next Story

