நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் மல்லபள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மல்லபள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தர்வல்லி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (02.08.2025) அன்று சென்னையில் இருந்து காணொளி காட்சியின் வாயிலாக "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வட்டம் மல்லப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்களும் நடைபெற்று வரும் நலம் காக்கும் எஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை கண்காட்சியில் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகத்தில் பராமரிப்பு துண்டு, குழந்தைகள் உடை, குழந்தைகள் படுக்கை, கொசுவலை, நாப்கின், குழந்தைகளுக்கு எண்ணெய், சோப்பு, ஷாம்பு, கை கழுவும் திரவம், சோப்பு பெட்டி, நகம் வெட்டி. கிளுகிளுப்பு பொம்மை உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில் வாழைப்பழம், கொய்யா, மாதுளை, நெல்லிக்காய், பேரிக்காய், வாழைக்காய், நூக்கல், பீட்ரூட், பாவக்காய், கேரட், கீரை வகைகள், நாட்டு சக்கரை, கம்பு, பச்சைப்பயிறு, காராமணி, கொள்ளு, வேர்க்கடலை, கேழ்வரகு, அரிசி பாயசம், கடலைப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சித்த மருத்துவத்துறை நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆயுர்வேத பொருட்கள் உள்ளிட்டவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கை பொருத்துவதற்காக அளவீடு எடுக்கப்பட்டு, மேலும் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, பல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டு அனைத்து பரிசோதனைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களும் பார்வையிட்டனர்.
Next Story