அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் இப்பயிற்சி வகுப்புபின் தொடக்கவிழா

திருக்குறள் படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரியில் 133 அடி உயரம் வள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார். சாதி, இனம், மதம் சார்ந்து அமையாமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உலகப் பொதுமறை திருக்குறள் என எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் இப்பயிற்சி வகுப்புபின் தொடக்கவிழா 9-8-2025 இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செம்மல் முனைவர் மாயக்கிருட்டினன் (விழாவின் ஒருங்கிணைப்பாளர்) அனைவரையும் வரவேற்று பேசினார். பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சுகன்யா நோக்க உரை ஆற்றினார். மொழியும் குறளும் பாதுகாக்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டார். நிகழ்விற்கு பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிச்சிட்டு வேல் இளங்கோ தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில் திருவள்ளுவரின் திருக்குறள் குறித்து விளக்கினார்.அதில இடம் பெற்றுள்ள அதிகாரங்களை பற்றியும் எடுத்துரைத்தார். திருக்குறள் படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரியில் 133 அடி உயரம் வள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார். சாதி, இனம், மதம் சார்ந்து அமையாமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உலகப் பொதுமறை திருக்குறள் என எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழ்ச்செம்மல் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக பயிற்சி வகுப்பின் வழிகாட்டுநர் செந்தில் குமரன் நன்றியுரையாற்றினார்.
Next Story