அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
குமரி மேற்கு மாவட்டம்
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர்கள் சலாம்  அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவவரும், கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் எழுச்சி பயணமான மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார எழுச்சி பயணம் குமரி மாவட்டம் வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள பூத் கமிட்டிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாருமான சின்னத்துரை கலந்து கொண்டார்.
Next Story