தஞ்சாவூரில் அரசு ஊழியா் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் 

தஞ்சாவூரில் அரசு ஊழியா் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் 
X
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தஞ்சாவூர் வடக்கு வட்டம் சார்பில்,  தொகுப்பூதியம், மதிப்பூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங், சிறப்பு காலமுறை ஊதியம் என அத்தக்கூலி முறைகளை கைவிட்டு அனைத்து நியமனங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிடவும், அனைத்து ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், தஞ்சாவூர் இந்து சமய அறநிலைய துறை  அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. வடக்கு வட்டச் செயலாளர்   ச.அஜெய்ராஜ்  தலைமை வகித்து கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்து சமய அறநிலையத்துறை சங்கத்தின் மாநில  செயலாளர் பாபு துவக்க உரையாற்றினார்.  அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர்  பார்த்தசாரதி  நிறைவுரையாற்றினார் . வடக்கு வட்ட இணைச் செயலாளர் கண்ணன்  நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story