இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் ரத்ததானம் முகாம்

X
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், தஞ்சை மாநகரம் கிளை சார்பில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை, கீழவாசல் மஸ்ஜிது தவ்ஹீத் பள்ளிவாசலில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் செய்யத் முஸ்தபா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ், மாவட்ட பொருளாளர் ஜாஃபர் சாதிக், மாவட்ட துணைச் செயலாளர்கள் அஷ்ரப் அலி மற்றும் வல்லம் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டு 44 யூனிட் ரத்தம் தானம் செய்தனர். தானமாக பெற்ற ரத்தத்தை மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் முஸ்தபா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஜி.சுதாவிடம் ஒப்படைத்தார். இம்முகாமுக்கான ஏற்பாடுகளை, கிளை நிர்வாகிகள் சேக் அப்துல் காதர், முஹம்மது சலீம், அஹமத், முஹம்மத் அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story

