மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மடிப்பு நுண்ணோக்கி உருவாக்கப் பயிற்சி பட்டறை..

X
Rasipuram King 24x7 |9 Aug 2025 7:15 PM ISTமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மடிப்பு நுண்ணோக்கி உருவாக்கப் பயிற்சி பட்டறை..
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்துஆசிரியர்களுக்கான காகித மடிப்பு நுண்ணோக்கி தயாரிக்கும் பயிற்சி பட்டறையை சனிக்கிழமை ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடத்தியது. இப் பயிற்சியின் துவக்க விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் பணிமனையை துவக்கி வைத்தார். சங்கச் செயலர் ஏ.மஸ்தான் வரவேற்றுப் பேசினார். ரோட்டரி சங்கச் சேவைத் திட்ட தலைவர் கே.எஸ். கருணாகர பன்னீர்செல்வம், சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்டஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம் நிகழ்ச்சியில் தலைமை வகித்துப் பேசியதாவது : காகித மடிப்பு நுண்ணோக்கியானது 60 – 120 கிராம் எடையுடன் இருப்பதாலும், நீடித்து உழைக்கக்கூடிய வகையில் இருப்பதாலும், நீர்ப்புகாத் தன்மையுடன் இருப்பதாலும் இதனை ஆசிரியர்களும், மாணவர்களும் வெளிப்புற அறிவியல் ஆய்விற்குப் பயன்படுத்த முடியும். இக்கருவியின் உதவியால் கண்ணிற்குத் தெரியாத ஒரு செல் உயிரியிலிருந்து கண்ணிற்குத் தெரியும் பொருட்கள் வரை இக்கருவிகணைக் கொண்டு உருப்பெருக்கம் செய்ய முடியும். இக்கருவியைக் கேள்வி அடிப்படையிலானக் கற்றலுக்கும், ஆசிரியர்களும், மாணவர்களும் அறிவியல் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட காகித மடிப்பு நுண்ணோக்கி உதவும் என்றார். மேலும், அறிவியல் ஆய்வுகளுக்கு செலவு மிகுந்த கருவிகணை வடிவமைக்கும்போது அதிகப்படியான மக்களால் அவற்ணைப் பயன்படுத்த முடியாது. அறிவியல் ஆய்வுக்கருவிகளை மலிவான விலையில் உயர்தரத்துடன் உருவாக்கி, அணனவருக்கும் கிடைக்கச் செய்வதால் அறிவியல் ஆராய்ச்சி வளரும். காகித மடிப்பு நுண்ணோக்கியை காகிதம் மற்றும் 140 மடங்குப் பொருட்களை உருபெருக்கம் செய்ய திறன் கொண்ட ஒரு சிறிய ஆடியை கொண்டு தயாரிக்கலாம். இதனை செல்போனுடன் இணைத்து படமும் எடுக்கலாம் என்றார். இப்பயிற்சியில் சேலம், நாமக்கல் திருச்சி, தஞ்சாவூர், தேனி,செங்கல்பட்டு, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து 92 ஆசிரியர் பங்கேற்றனர். முன்னதாக காகித மடிப்பு நுண்ணோக்கி உருவாக்கப் பணிமனைக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ப.அருளானந்தம் கருத்துரையாளராகச் செயல்பட்டார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் செல்வி பீட்ஸ் கந்தசாமி, இளங்கோ, வெங்கடாஜலம், வி.சதாசிவம், நடராஜன், பி.கே.ராஜா, பாண்டிச்சேரி ஆல் இந்தியா ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன், போல்ட்ஸ் கோப்பர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். முடிவில் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வேதராஜ பால்சன் நன்றி கூறினார்.
Next Story
