அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய நபரை கைது

X
இரகசிய தகவலின்படி தனிப்படையினர் நடத்திய சோதனையில் மருதையாற்றுப்பகுதியில் JCB இயந்திரம் மூலம் டிராக்டரில் மணல் திருடிக்கொண்டு வந்த செல்வம் 42/25 த/பெ பழனிமுத்து, அண்ணா மன்றம் தெரு, கூடலூர்,ஆலத்தூர் வட்டம் பெரம்பலூர் மாவட்டம் என்பவரை கைது செய்த தனிப்படையினர் மேற்படி நபரை மருவத்தூர் காவல்நிலையத்தில்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி தனிப்படையினர் நடத்திய சோதனையில் மருதையாற்றுப்பகுதியில் JCB இயந்திரம் மூலம் டிராக்டரில் மணல் திருடிக்கொண்டு வந்த செல்வம் 42/25 த/பெ பழனிமுத்து, அண்ணா மன்றம் தெரு, கூடலூர்,ஆலத்தூர் வட்டம் பெரம்பலூர் மாவட்டம் என்பவரை கைது செய்த தனிப்படையினர் மேற்படி நபரை மருவத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மேற்படி நபரின்மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 5 யுனிட் மணல் மற்றும் JCB, டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.
Next Story

