தமிழக சட்டமன்றத் தேர்தலில் வீடியோ மற்றும் ஃபோட்டோ கலைஞர்களுக்கென தனி நல வாரியம் வேண்டும்

X
திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்களுக்கென தனியாக நல வாரியம் அமைத்து இத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் போதும் வீடியோ பதிவு செய்யும் பணிகளை, கார்ப்பரேட்
பெரம்பலூர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வீடியோ மற்றும் ஃபோட்டோ கலைஞர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க உத்திரவாதம் அளிக்கும் கட்சிக்கே தங்களது ஆதரவு என்று தமிழ்நாடு வீடியோ மற்றும் ஃபோட்டோ கலைஞர்கள் நல கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் விஜயபாலன் பெரம்பலூரில் தெரிவித்துள்ளார். தமிழக வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தங்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்களுக்கென தனியாக நல வாரியம் அமைத்து இத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் போதும் வீடியோ பதிவு செய்யும் பணிகளை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காமல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வீடியோ போட்டோ கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு வீடியோ, போட்டோ கலைஞர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் விஜயபாலன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் விஜயபாலன், திமுக தேர்தல் வாக்குறுதியில் வீடியோ போட்டோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு தனி நல வாரியம் அமைக்க உத்திரவாதம் அளிக்கும் கட்சிகளுக்கே தங்களது ஆதரவை தெரிவிப்போம் எனவும், தேர்தலின் போது வீடியோ பதிவு செய்யப்படும் பணிகளை கடந்த சில வருடங்களாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கி வருவதால் மாவட்டங்களில் உள்ள வீடியோ கலைஞர்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும் எனவே தேர்தலின் போது வீடியோ பதிவு செய்யும் பணிகளையும், அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை வீடியோ பதிவு செய்யும் பணிகளையும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வீடியோ கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story

