பட்டணம் பேரூராட்சியில் இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று குறைகள் கேட்ட அமைச்சர் சாலையோர டீக்கடையில் டீ குடித்தார்..

X
Rasipuram King 24x7 |9 Aug 2025 7:55 PM ISTபட்டணம் பேரூராட்சியில் இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று குறைகள் கேட்ட அமைச்சர் சாலையோர டீக்கடையில் டீ குடித்தார்..
ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சியில் அமைச்சர் மதிவேந்தன் இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று குறைகள் கேட்டதோடு சாலை ஓரத்தில் கடையில் அமர்ந்து டீ குடித்தார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மருத்துவர் மா.மதிவேந்தன் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.பட்டணம் பேரூராட்சியில் நேற்று இரவு 7 மணி அளவில் பேரூராட்சிக்குட்பட்ட 9,10,11,12,13 வார்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று குறைகளை கேட்டறிந்தார். சில வீடுகள் உள்ளே தாளிட்டு இருந்தாலும் அவர்களை வெளியே அழைத்து உங்களுக்கு என்ன குறைகள் இருக்கிறது? அதனை கூறுங்கள் எனவும் மேலும் குறைகள் இருந்தால் எனது தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள் என முகவரி அட்டையை கொடுத்து சென்றார். மேலும் இந்தக் குறை கேட்கும் போது சிலர் தங்களது பகுதிகளில் அதிக அளவிலான தண்ணீர் வருவதாகவும் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றும் இரண்டொரு இடங்களில் சாலை சரி செய்ய வேண்டும், தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவைகளை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பல இடங்களில் குறைகளை கேட்டு பின்னர் பட்டணம் பேரூராட்சி பகுதியில் சாலையோர தேநீர் டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார்.. இந்த குறைகள் கேட்கும் போது பட்டணம் பேரூராட்சி திமுக செயலாளர் பொன். நல்லதம்பி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்...
Next Story
