சென்னையில் இந்திய ராணுவ தலைமை தளபதியை சந்தித்த கரூர் பரணி பார்க் பள்ளி நிர்வாகிகள்.
சென்னையில் இந்திய ராணுவ தலைமை தளபதியை சந்தித்த கரூர் பரணி பார்க் பள்ளி நிர்வாகிகள். இன்று ஆகஸ்ட் 9 நாடு முழுவதும் சகோதரத்தைப் போற்றும் ரக்க்ஷாபந்தன் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் அண்மையில நடைபெற்ற வண்ணமிகு விழாவில் இந்திய ராணுவத்திற்காக ஒன்பதாவது ஆண்டாக கரூர் பரணி பார்க் வித்யாலயா ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து தயாரித்த 18 மொழிகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட இரண்டு லட்சம் ராக்கி கயிறுகள், ஆபரேஷன் சிந்தூர் ராக்கி கயிறுகள் உள்ளிட்ட மொத்தம் மூன்று லட்சம் ராக்கி கயிறுகளை வீரம் செறிந்த இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களிடம் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினருமான முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன், குழுவினர் சம்பிரதாய முறைப்படி பாரம்பரிய உடையணிந்து நேற்று இந்திய ராணுவ தலைமைத் தளபதியிடம் ராக்கி கயிறுகளை ஒப்படைத்தனர்.
Next Story






