மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை நடக்கிறது

X
மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான முகாம் வருகிற 18-ஆம் தேதி அன்று நடக்கிறது. இந்த முகாமில் 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் 200 மி.கி. மாத்திரையும், 2 முதல் 19 வயது சிறுவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு 400 மி.கி. மாத்திரையும் வழங்கப்படும். இந்த முகாம் மாவட்டத்தில் 1,796 அங்கன்வாடி மையங்கள், 270 சுகாதார நிலையங் கள், 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள். 61 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறுகிறது. என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
Next Story

